அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கொன்னையூர், புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ., தொலைவில் பொன்னமராவதி செல்லும் வழியில் கோயில் அமைந்துள்ளது..
இங்கு பங்குனி மாதத்தில் நடைபெறும் 15நாள் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இந்த திருவிழாவிற்கு சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் வரும் பக்தர்கள் அம்மனை வணங்கி தங்களது வேண்டுதல்களையும், நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர்
பக்தர்கள் தாங்கள் நினைத்தது நிறைவேறியதும் கண்மலர், உருவபொம்மை, உப்பு, மிளகு, அமோகமாக விளைந்த நெல் என நேர்த்திக் கடனைச் செலுத்தி, வணங்குகின்றனர். மேலும், சந்தனம் மற்றும் பாலபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல், மாவிளக்கு நைவேத்தியம் படைத்தும், முடிகாணிக்கையும் செலுத்துகின்றனர்்
ஆரம்பத்தில், ஊரில் இருந்து காட்டுக்கு நடந்து வந்து, அம்மனை வணங்கியவர்கள், பிறகு, காட்டையே ஊராக்கிக் குடிபுகுந்தனர். கொன்றை மரங்கள் அடர்ந்த வனம், கொன்றையூர் என்றானது; பின்னாளில் அது, கொன்னையூர் என மருவியது.
ஆடி அமாவாசை, பங்குனி திருவிழா, தமிழ் மாதப் பிறப்பு
![]()
இங்குள்ள நெல்லிமரத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க தொட்டில் கட்டியும் திருமணம் நடைபெற மஞ்சள் கயிறு கட்டியும் சுகப்பிரசவம் நிகழ தொட்டிலும், வளையலும் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர்.